Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்கே போனார் அழகிரி: பதுங்குவது பாயவா? பம்மவா?

Advertiesment
எங்கே போனார் அழகிரி: பதுங்குவது பாயவா? பம்மவா?
, சனி, 27 அக்டோபர் 2018 (17:45 IST)
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மரணமடைந்த போது திமுகவில் பிளவு ஏற்படும் என்பதற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர் அழகிரி. அந்த சமயத்தில் ஊடங்களில் அவரை குறித்த செய்திதான் அதிகமாக இருந்தது. 
 
ஸ்டாலின் என்னை கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் இல்லையெனில் திமுக கடும் விளைவுகளை சந்திக்கும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அமைதி பேரணி ஒன்றை நடத்தி கவனத்தை தன் பக்கம் இழுக்க முயற்சித்தார்.  
 
போதகுறையாக அழகிரியின் மகனும் அவ்வப்போது தந்தைக்கு ஆதரவாக பேச வேண்டும் என சில அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்தார். ஆனால், இவை எதையும் ஸ்டாலின் கண்டுக்கொண்டதாய் தெரியவில்லை. 
 
அந்த சூழ்நிலையில், திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றனம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்த போது அழகிரி தனது தந்தை தொகுதியான திரூவாரூரில் போட்டியிடுவார் என கூறப்பட்டது. 
 
ஆனால், இதற்கு பிறகு அழகிரியை காணவில்லை. தற்போது தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கபப்ட்டு 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் விரைவில் நடத்தப்படும் என கூறப்பட்டபோது ஸ்டாலின் இடைத்தேர்தலை சந்திக்க தயார் என கூறினார். 
 
ஆனால், அழகிரியின் நிலைபாடு என்ன தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா? அல்லது இப்படியே அமைதியார் போய்விடுவாரா? தற்போது வர அமைதி காப்பதற்கான காரணம் என்னவென எந்த ஒரு தகவலும் அவர் தரப்பில் இருந்து கிடைக்காமல் உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீமான் அண்ணா AK 74 எடுத்துட்டு வரவும்: சிக்கலிலும் நக்கல்!