Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன? - முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன? - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Sinoj

, வெள்ளி, 5 ஜனவரி 2024 (16:16 IST)
இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும் அவர்களின்  நிதியுதவியுடன் நடக்கும் திட்டங்களாக இருந்தாலும் சரி மாநில அரசு அதிகமான பங்களிப்பை வழங்குகிறது. மாநில அரசுக்கு எந்த வகையான உதவியையும் மத்திய அரசு வழங்காதது வருத்தம் அளிக்கிறது என்று தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு  மத்திய அரசை குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் தெரிவித்துள்ளதாவது:
 
-பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது திராவிடமாடல் அரசு.
 
-ஆட்சி அமைந்தது முதல், மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் அளவுக்கு செலவில் மிச்சம்,

-காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு  
 
 -புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய்,
 
 -கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய்
 
எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது திராவிடமாடல் அரசு.
 
இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன?
 
ஒன்றிய நிதியமைச்சரின் பேச்சுக்கு விரிவான பதில் தந்திருக்கிறார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு என்று தெரிவித்துள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் மையம்.. முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம்?