Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்.கே. நகர் எனும் மற்றும் ஒரு திருமங்கலம்...

ஆர்.கே. நகர் எனும் மற்றும் ஒரு திருமங்கலம்...
, செவ்வாய், 19 டிசம்பர் 2017 (12:20 IST)
மஹாத்மா காந்தியின் குரங்கு பொம்மைகள் சொல்லும் செய்தியைப்போல ஆர். கே நகரில் தேர்தல் ஆணையம் தமிழக மக்களுக்கு சொல்லும் செய்தி!


 
 

நாங்கள் பணப்பரிமாற்றத்தை கண்டு கொள்ளவே மாட்டோம்! கண்களை மூடிக்கொள்வோம்!
 
நாங்கள் பணப்பரிமாற்றத்தைப் பற்றி செய்திகளை கேட்கவே மாட்டோம் !  காதுகளை மூடிக்கொள்வோம் !
 
நாங்கள் பணப்பரிமாற்றத்தைப் பற்றி வாய் திறக்க மாட்டோம் ! வாயை  மூடிக்கொள்வோம் !
 
கண்கள்  திறந்து, வாய் திறந்து, காதுகள்  திறந்து ஆர். கே நகரில் தேர்தல் நடத்த மாட்டோம். 
 
உண்மையில் நக்ஸல்களும், மாவோக்களும், தீவிரவாதிகளும்  நிறைந்தப்பகுதிகளில் திறன்பட செயல்பட்ட இந்திய தேர்தல் ஆணையம் ! டி. என். சேஷன், லிங்டே போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் அதிகாரம் செய்த தேர்தல் ஆணையத்தின் நிலை பரிதாபம் !    ஆர். கே. நகரில் பரிதாபம் ! அந்தோ பரிதாபம்  !
 
திருமங்கலம் பார்முலாவுக்கும், ஆர். கே நகர் பார்முலாவுக்கும், ஒரே வித்தியாசம் ?  அங்க, அப்ப,  ஐநூறு  மழை ! இப்ப இங்க இரண்டாயிரம் மழை !
 
ஊர் எல்லாம் திருவிழாவாம் ! ஆர் கே நகரில் மட்டும் பண மழையாம் !
 
ஊர் எல்லாம் இரண்டாயிரம் நோட் மழையாம் ! 
 
தேர்தல் ஆணையத்தின் முந்தானையில்  மண் !     
 
தேர்தல் ஆணையம் என்ற ஒன்று ஆர். கே நகரில் உண்மையில் இருக்கிறதா ? வேலை செய்கிறதா ? கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேர்தல் ஆணையம் என்ற ஒன்றே இல்லை என்றே தோன்றுகிறது !
 
மோடி இந்த குஜராத் வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறாரா ? என்று நடிகர் பிரகாஷ்ராஜ் மோடியைப் பார்த்து கேட்டதுப் போல,   இந்த தேர்தல் ஆணையம் ஆர். கே நகர் தேர்தல் பணிகளில் திருப்தி அடைகிறதா ?
 
எங்கே பத்ரா?
 
எங்கே பத்ரா? தேர்தலை நடத்த வேண்டுமே என்ற கடமைக்கு தான் தேர்தல் நடத்துகிறீர்களா என்ன பத்ரா? கடமைக்கு தான் தேர்தல் நடத்துகிறீர்கள் என்றால்  அதற்கு நீங்கள் எதற்கு? அதற்கு  மாநில தேர்தல் ஆணையமே போதுமானதே ! நீங்கள் எதற்கு பத்ரா? 
 
எங்கே போனார்கள் தேர்தல் நுண் பார்வையாளர்கள்? திருதுராஷ்டிரன் போல குருடாகி போனார்களா அல்லது காத்தாரியைப்போல கண்களை கட்டி கொண்டார்களா?
 
webdunia

 
 






இரா காஜா பந்தா நவாஸ்
[email protected]

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக; வாக்கு வங்கியில் தோல்வியைத் தழுவியது