தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சீரான இடைவெளியில் மழை பெய்து வருகிறது. ஒரு வாரமாக மழை இல்லாத நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் இன்று இரவு முதல் மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மழை குறித்த அப்டேட்டுகளை தமிழ்நாடு வெத்ர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அதன்படி, கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் உள்பட தமிழகத்திலும் இன்று முதல் 6 ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடுமாம்.
டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று மாலை முதல் மழை துவங்கிவிடும். சென்னை, புதுச்சேரி மற்றும் கடலூர் மண்டலங்களில் இரவில் இருந்தோ அல்லது அதிகாலை முதலோ மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம், நெல்லூர், சித்தூர், தென்சென்னை பகுதிகளான காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாம்.
நீலகிரி, திருநெல்வேலி அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகள், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளார்.