இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
திங்கள், 3 பிப்ரவரி 2025 (15:15 IST)
தமிழ்நாட்டில் பருவமழை காலம் முடிந்த நிலையில், தற்போது பனிக்காலம் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்னும் சில வாரங்களில் கோடைக்காலம் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இனிமேல் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும், அதாவது ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். அதிகாலை வேளையில் மட்டும் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 5 முதல் 9ஆம் தேதி வரை வறண்ட வானிலை தான் நிலவும் என்றும், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை வேளையில் சென்னை உள்பட பல பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்பட்டது. நாளையும் மேகமூட்டத்துடன் கூடிய பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்னும் சில வாரங்களில் கோடைக்காலம் தொடங்கவிருக்கும் நிலையில், பொதுமக்கள் அதற்கு தயாராகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments