தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியை நீக்க கோரிய மனு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!
, திங்கள், 3 பிப்ரவரி 2025 (13:35 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஜனவரி 6ஆம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் ஆர்என் ரவி தனது உரையை நிகழ்த்தாமல் வெளியே சென்றதாகவும், தொடக்கத்திலேயே தேசிய கீதம் பாட வேண்டும் என்று ஆளுநர் கூறியதற்கு தமிழக அரசு மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உரையை நிகழ்த்தாமல் சென்றது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், ஆளுநர் பதவியிலிருந்து அவரை திரும்ப பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில், இது போன்ற வழக்குகளை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்