இன்று காலை 10 மணி வரை வெளுத்து வாங்கும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

Siva
திங்கள், 25 நவம்பர் 2024 (07:26 IST)
இன்று காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சற்று முன் தகவல் வெளியிட்டுள்ளது.
 
வங்க கடலில் தோன்றிய வளிமண்டல காற்றழுத்த தாழ்வு இன்று முதல் தீவிரமாகும் என்றும், அது வளிமண்டல காற்றழுத்த மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
 
மேலும், நவம்பர் 25 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களில் அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் உள்ள மூன்று மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது.
 
தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தான் காலை 10 மணிக்குள் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 
சென்னையை பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு வேளைகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments