Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் நாடாளுமன்ற கூட்டம்.. வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேறுமா?

Siva
திங்கள், 25 நவம்பர் 2024 (07:23 IST)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், வக்பு வாரிய திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
அதேபோல், மணிப்பூர் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளதால், நாடாளுமன்றம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மத்திய அரசு இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற குறிப்பாக வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்ற கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
அதுமட்டுமின்றி, அதானி குழுமம் லஞ்ச புகார் குறித்து விசாரணை செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
மணிப்பூர் வன்முறை மற்றும் மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டிய நிதியுதவி போன்ற பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
 
எனவே, இந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments