சென்னை உள்பட மூன்று மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் தோன்றிய புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும், குறிப்பாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்று கணித்து அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், சற்றுமுன் இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
இதனை அடுத்து, மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த நிலையில், வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையை நோக்கி வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.