Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தமிழகத்தில் மழையா? என்ன சொல்கிறது வானிலை அறிவிப்பு..!

Mahendran
புதன், 4 டிசம்பர் 2024 (16:33 IST)
தமிழகத்தில் தற்போது தான் புயல் அடித்து ஓய்ந்துள்ள நிலையில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் டிசம்பர் 10ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் உள்ள சில பகுதிகளிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை டிசம்பர் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான பணிமூட்டம் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
டிசம்பர் 6ஆம் தேதி தெற்கு அரபிக் கடலின் வடக்கு பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதால், அந்த பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுரைத்துள்ளது.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments