Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதியம் 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை எச்சரிக்கை..!

Mahendran
புதன், 27 நவம்பர் 2024 (10:41 IST)
இன்று மதியம் ஒரு மணி வரை தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
வங்கக்கடலில் உருவான புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், அவ்வப்போது மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த நிலவரத்தையும் சென்னை வானிலை ஆய்வு மையம் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறது.
 
அந்த வகையில், மதியம் ஒரு மணி வரை சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய்களில் பிறந்து, பொய்களில் வாழும் ஒரே கட்சி தலைவர் அண்ணாமலை: சேகர்பாபு

இந்துக்கள் அல்லாதவர்களுக்கு கேதார்நாத் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக

'ரூ' என்பது பெரிதானது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கை..!

அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஏன்? ரயில்வே துறை விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments