Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

Siva
சனி, 22 மார்ச் 2025 (12:09 IST)
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் நடைபெறும் ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ கூட்டத்தில் கலந்துகொள்ள கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் சென்னை வந்தார். அவரை அமைச்சர் பொன்முடி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக எம்.பி அப்துல்லா ஆகியோர் வரவேற்றனர்.
 
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாங்கள் எக்காரணமும் இல்லாமல் எங்கள் தொகுதிகளை விட்டுக்கொடுக்க மாட்டோம். ஒற்றுமையாக நின்று, மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்போம்," என்று உறுதியாக தெரிவித்தார். 
 
மேலும், "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூட்டாட்சி மதிப்புக்காக சிறப்பாக செயற்படுகிறார். இதை நான் பாராட்டுகிறேன். இதுவே ஒரு தொடக்கம். இதை தொடர்ந்து, இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்," என்றார்.
 
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது வளர்ந்த மாநிலங்களை அநீதி செய்யும் நடவடிக்கையாகும். கல்வி, பொருளாதாரம், மக்கள் தொகை கட்டுப்பாட்டில் முன்னேறிய மாநிலங்கள், "தொகுதிகளை இழக்க வேண்டும்" எனும் எண்ணம் முற்றிலும் தவறு. "நாங்கள் ஒன்றிணைந்து இந்த தவறான திட்டத்தை எதிர்ப்போம். எங்கள் உரிமைகளை காப்போம். எனது மீது எந்த அழுத்தமும் வந்தாலும் நான் அஞ்சமாட்டேன். திஹார் சிறைக்குச் சென்றாலும், எங்கள் மாநில உரிமையை விட மாட்டேன்," என்று அவர் வலியுறுத்தினார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments