Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேன் கூட்டை கலைக்கத்தான் தீ வைத்தோம்! ஜல்லிக்கட்டு விசாரணையில் போலீஸார் தகவல்

Advertiesment
Jallikattu inquiry
, சனி, 2 பிப்ரவரி 2019 (09:46 IST)
கடந்த 2017ம் ஆண்டு  பொங்கல் பண்டிகையின் போது 
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை.



தொடர்ந்து 3 ஆண்டுகள் போராட்டிகள் நடைபெறாததை கண்டித்து  பொதுமக்கள் தன்னெழுச்சியாக பேராடினார்கள்.  இந்த போராட்டம் சென்னை மெரினாவில் மிகப்பெரிய அளவில் நடந்தது.  மேலும் மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, என அத்தனை மாவட்டங்களிலும் பொதுமக்கள் தெருவில் இறங்கி போராடினார்கள். இது மட்டுமின்றி, உலகம் முழுவதும் தமிழர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினார்கள். இதைக் கண்டு உலக நாடுகளே தமிழகத்தைத் திரும்பிப் பார்த்தது இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாளில் சென்னை உள்பட எல்லா நகரங்களிலும் மிகப்பெரிய வன்முறை நடந்தது. இது தொடர்பாக விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது.
 
இந்நிலையில் ஜல்லிக்கட்டுத் தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை மதுரையில் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போராட்டக் குழு விசாரணை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ``அலங்காநல்லூர் போராட்டத்தின் முடிவில் காவல்துறை செய்தது சரி என்றே அதிகமானோர் விசாரணையில் தெரிவித்துள்ளனர். 22-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வந்த அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகப் போராடியதாகவும் நாங்கள் நடத்த நினைத்தபோதும் போராட்டத்துக்கு வந்தவர்கள் மக்களை திசை திருப்பியதாகவும் தெரிவித்தனர். சென்னையில் வாகனங்களுக்குக் காவல்துறை தீ வைத்த சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்தவர்கள், தேன்கூடு மீது கல் எறிந்தபோது குழவிகள் மக்களைக் கொட்ட வந்ததாகவும் அதைத் தடுக்க காவல்துறையினர் தீப்பந்தத்தை வைத்து விரட்டியதாகவும் சாட்சியம் அளித்துள்ளனர்’’ இவ்வாறு  தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக கூட்டணிக்கு பாமக அழைக்கப்படாதது ஏன்? ஸ்டாலினின் புது கணக்கு