பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரை ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு அண்ணாமலையில் யாத்திரை தொடக்கவிழா நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
அண்ணாமலையில் ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை மேற்கொள்ளும் நிலையில், இன்று சிவங்கங்கை மாவட்டத்திற்குச் சென்ற அண்ணாமலைக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர்.
அங்குள்ள பாஜகவினர் வீடுகளுக்கு அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் சென்று பாஜக தொண்டர்களை சந்தித்து வருகின்றனர்.
இதுபற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இன்றைய #என் மக்கள் என் பயணத்தில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், சிறப்புமிக்க மண்பாண்டங்கள் செய்யும் தொழிலாளர்களைச் சந்தித்து உரையாடினோம்.
மண்பானைகள் மட்டுமல்லாது, மண்ணால் ஆன அழகிய கலைப் பொருள்கள் ஆகியவற்றை நேர்த்தியாக, மிகுந்த கலைநயத்துடன் செய்வதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்.
பல நூற்றாண்டுகளாக, மண் பானைகள் நம் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கின்றன. அதனை உணர்ந்துதான் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள், KVIC மூலம், மண்பானைகள் உற்பத்தி உள்ளிட்ட கைவினைப் பொருள்கள் செய்பவர்களுக்கு பயிற்சியும், தொழில் தொடங்க மானியமும் வழங்குகிறார். அவற்றின் மூலம் நமது தமிழ் சகோதரர்கள் பெரும் பலனடைவது மகிழ்ச்சியளிக்கிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் மெப்பல் எம் சக்தி ஆகியோர் உடனிருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.