ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல்கள் எங்களிடம் உள்ளது, அதை எங்கேயும் எப்போதும் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம் என ஈஷா பதிலடி கொடுத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளதற்கும் அதைச் சுற்றியுள்ள கட்டிடங்களுக்கும் அனுமதி பெறவில்லை என்றும் எனவே அந்த பகுதியில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் ஆதியோகி சிலை மற்றும் கட்டிடங்களுக்கு ஈஷா பவுண்டேஷன் அமைப்பு முன் அனுமதி பெறவில்லை என தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்தது.
இதையடுத்து, ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல்கள் எங்களிடம் உள்ளது, அதை எங்கேயும் எப்போதும் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம் என ஈஷா பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து ஈஷா கூறியுள்ளதாவது:
ஆதியோகி சிலை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதிகளை பெற்றுள்ளோம். மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிகாரிகள் முன் அதை சமர்பிப்போம் என்று தெரிவித்துள்ளது.