Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல் போட்டி நடத்தக் கூடாதுன்னு நாங்கள் கூறவில்லை - ஸ்டாலின்

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (07:23 IST)
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என நாங்கள் கூறவில்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என வேல்முருகன், தமிமுன் அன்சாரி, திராவிடர் கழக தலைவர் வீரமணி மற்றும் சில இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
 
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பிய நிருபர்கள், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளால் காவிரிக்கான போராட்டங்கள் திசை திருப்பப்படுவதாக கூறப்படுகிறதே? என்று ஸ்டாலினிடம் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அவர், எங்களைப் பொறுத்தவரையில் ஐ.பி.எல் போட்டி  நடத்தக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. போட்டிகளை ஏற்பாடு செய்திருப்பவர்கள், மக்களுடைய பிரச்சினைகளை உணர்ந்து, அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும் என்று தான் சொல்கிறோம் என ஸ்டாலின் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments