Webdunia - Bharat's app for daily news and videos

Install App

BOMB TO BRISBANE: பார்சலால் ஸ்தம்பித்த விமான நிலையம்!

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (21:31 IST)
மும்பையில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற மூதாட்டி ஒருவர் தன்னுடன் பார்சல் ஒன்றை கொண்டு சென்றுள்ளார். அந்த பார்சலில் BOMB TO BRISBANE என எழுதப்பட்டிருந்தது. இதனால், விமான நிலையத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 
வெங்கட லட்சுமி என்ற மூதாட்டி ஒருவர் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தனது மகளை அவளது பிறந்தநாளை முன்னிட்டு காண சென்றுள்ளார். இவருக்கு நியாபகமறதி  உள்ளதால், தனது மகளுக்காக கொண்டு செல்லப்பட்ட பார்சல் மீது BOMB TO BRISBANE என எழுதி வைத்திருந்தார்.
 
BOMB TO BRISBANE என்பதற்கு பிரிஸ்பன் நகரத்திற்கு அனுப்பப்படும் பாம் என்று பொருள். மூதாட்டியின் பார்சலை கண்ட சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து புகார் அளித்துள்ளனர். 
 
இதன் பின்னர் ஆஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள், இந்த பார்சல் குறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த பையில் துணிகளை தவிர வேறு எதுவுமே இல்லை என்றதும் மூதாட்டி விடுவிக்கப்பட்டார்.
 
பையில் ஏன் இப்படி எழுதினீர்கள் என கேட்டதற்கு, நான் பாம்பேயில் இருந்து வருகிறேன். முழுதாக பாம்பே என்று எழுத இடமில்லை. அதனால் பாம் என்று எழுதினேன். கீழே மும்பை என்று சிறியதாக எழுதி இருந்தேன் என பதில் அளித்தாராம் அந்த மூதாட்டி. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பது எங்கே? பாலச்சந்திரன் பேட்டி..!

தமிழ்நாட்டில் வேர்க்கடலை பயிரிட குஜராத்தில் விதைகளை வாங்கும் விவசாயிகள் - என்ன காரணம்?

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

அடுத்த கட்டுரையில்
Show comments