Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாம் உறுதியாக இருந்தால் தான் கொரோனாவிலிருந்து தப்பிக்க முடியும். – ராமதாஸ்

நாம் உறுதியாக இருந்தால் தான் கொரோனாவிலிருந்து தப்பிக்க முடியும். –  ராமதாஸ்
, ஞாயிறு, 3 மே 2020 (14:02 IST)
சென்னயில் நாள் தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், கோயம்பேட்டில் காய்கறி வாங்கச் சென்றவர்களின் மூலம் அதிகளவில் நோய்த் தொற்று அதிகரித்துவருகிறது. சென்னை அசோக்நகரை சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்துபாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

கோயம்பேடு காய்கறி மொத்த வணிக சந்தை மொத்த கொரோனா தொற்று சந்தையாக மாறியிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி கோயம்பேட்டில் ஏற்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 119. சென்னையில் 52, அரியலூர் 22, விழுப்புரம் 20, கடலூர் 17, காஞ்சிபுரம் 7, பெரம்பலூர் 1 என பட்டியல் நீள்கிறது!

சென்னையிலும், சென்னை புறநகர் மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பது முரண்பாடுதான். விதிகள் தளர்ந்தாலும் நாம் உறுதியாக இருந்தால் தான் கொரோனாவிலிருந்து தப்பிக்க முடியும். ஆகவே, ஊரடங்கை கடுமையாக கடைபிடிப்போம்! என தெரிவித்திருந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா எதிரொலி: டெல்லி சி.ஆர்.பி.எப். தலைமை அலுவலகத்திற்கு சீல்