தண்ணீர் பிரச்சனையில் அரிவாள் வெட்டு:சென்னையில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (17:15 IST)
சென்னை அனகாபுத்தூரில் தண்ணீர் சண்டையில், ஒரு பெண்ணை அரிவாளால் வெட்டிய செய்தி, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் தற்போது தண்ணீர் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது.
முக்கியமாக சென்னை புறநகர் பகுதிகளில் பல நாட்களாக தண்ணீர் விநியோகம் இல்லாமல் மக்கள் தவித்துவருகின்றனர்.

மேலும் சென்னையில் பல பகுதிகளில் மக்கள், தண்ணிர் விநியோகம் இல்லாததால் காலி குடங்களுடன் தெருவில் இறங்கி சாலை மறியலில் ஈடுபடும் செய்திகள் ஆங்காங்கே வெளிவருகிறது.

இதன் உச்சக்கட்டமாக, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல உணவகங்கள் மூடப்பட்டும், பல பன்னாட்டு கம்பெனிகளில் வேலை நிறுத்தம் செய்யப்பட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது சென்னை அனகாப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த அமரேஷன் நகரில் ,குடிநீர் விநியோகத்தின் போது ஏற்பட்ட சண்டையில், சுபாஷினி என்ற பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொலையை செய்த சபாநாயகரின் கார் ஓட்டுநர் ஆதிமூல ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே சென்னையில் தண்ணீருக்காக பல சண்டைகள் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், தற்போது இந்த சம்பவம் சென்னை அனகாப்புத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்! தவெக விஜய்யின் இரங்கல் பதிவு!

விஜய் கைது செய்யப்பட வாய்ப்பு? பிரச்சாரத்திற்கு முழுவதும் தடை? - என்ன நடக்கும்?

திமுகவின் அஜாக்கிரதையே இவ்வளவு உயிர் பலிகளுக்கு காரணம்!? - அண்ணாமலை கண்டனம்!

கரூர் துயர சம்பவம்! உடனே கரூர் கிளம்பிய மு.க.ஸ்டாலின்! பிரதமர் மோடி இரங்கல்!

விஜய் பிரச்சாரத்தில் துயரம்! கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலி! - கண்ணீரில் கரூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments