தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏரிகள் நிரம்ப தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி இரண்டு நாட்களாக விடாமல் பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் கனமழை பெய்து நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் பல இடங்களில் வெள்ளக் காடாக மாறியுள்ளது.
கனமழை காரணமாக தமிழகத்தின் நீர்நிலைகள் நிரம்ப ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள சுமார் 272 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளன. மீதமுள்ள ஏரிகளும் வேகமாக முழுக் கொள்ளவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.