தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் குடிமகன் வாங்கிய பீர் ஒன்றில் நுரை வரவில்லை என்பதை அடுத்து அதில் தண்ணீர் இருந்ததை பார்த்து அந்த குடிமகன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபானங்கள் கலப்படம் உள்ளதாக இருப்பதாக குடிமகன்கள் குற்றச்சாட்டு கூறிவரும் நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே டாஸ்மாக் மது கடையில் நேற்று குடிமகன் ஒருவர் பீர் வாங்கி உள்ளார்.
பீரை ஓப்பன் செய்ததும் நுரையே வரவில்லை என்பதை அறிந்ததும் அவர் சந்தேகம் அடைந்து கிளாசில் ஊற்றிய போது அது பீர் இல்லை வெறும் தண்ணீர் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் டாஸ்மாக் கடையில் உள்ள ஊழியரிடம் வாக்குவாதம் செய்ததாகவும் கடை ஊழியர்கள் சரியான விளக்கம் அளிக்காததை அடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
டாஸ்மாக் கடையில் வாங்கப்பட்ட பீரில் தண்ணீர் கலந்து இருப்பதை அறிந்த அந்த பகுதி குடிமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் விசாரணை செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.