Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதாவின் பணம், நகையை கொள்ளையடித்தது தீபாவின் கணவர் மாதவனா?

ஜெயலலிதாவின் பணம், நகையை கொள்ளையடித்தது தீபாவின் கணவர் மாதவனா?

Advertiesment
ஜெயலலிதாவின் பணம், நகையை கொள்ளையடித்தது தீபாவின் கணவர் மாதவனா?
, திங்கள், 12 ஜூன் 2017 (10:08 IST)
ஜெயலலிதா இருந்திருந்தால் நடைபெறாத சம்பவங்கள் எல்லாம் நேற்று போயஸ் கார்டனில் நடந்தது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போயஸ் கார்டனில் நடத்திய ஆர்ப்பாட்டம் தான் நேற்று ஊடகங்களில் பேசப்பட்டது.


 
 
பொதுவெளியில் தனது தம்பியை நாகரீகம் இல்லாமல் இல்லாமல் திட்டியது தீபாவின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. இந்த சண்டையின் போது ராஜா என்ற நபரும் முக்கியத்துவம் பெற்றார். தீபாவின் டிரைவர் என கூறப்படும் இந்த நபர் தீபாவின் கணவர் மாதவனை கழுவி கழுவி ஊற்றுவது ஊடகங்களில் வெளியானது.
 
தீபாவை வா, போ என ஒருமையில் பேசும் அளவுக்கு செல்வாக்கோடு உள்ள அவரது டிரைவர் ராஜா மாதவனை கெட்ட வார்த்தையால் திட்டுகிறார். வழக்கமாக சென்னையில் பலர் திட்டும் அந்த கெட்ட வார்த்தையுடன் ஆரம்பித்து திருட்டு நாயே, ஜெயலலிதாவின் பணம், நகைகளை கொள்ளையடித்தவன் தானேடா நீ என மாதவனை ராஜா நேற்று திட்டினார்.
 
பொதுமக்கள், போலீசார் முன்னிலையில் கணவர் மாதவனை தீபாவின் டிரைவர் இப்படி திட்டுகிறார் ஆனால் அதை கண்டுக்காமல் அமைதியா நிற்கிறார் தீபா. முன்னதாக தீபா பேரவை ஆரம்பித்த போது இந்த டிரைவர் ராஜாவை தான் பொதுச்செயலாளராக அறிவித்தார். அது சர்ச்சையான பின்னர் தான் அவர் மாற்றப்பட்டு அந்த பொறுப்பை தீபா ஏற்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாரும்மா இந்த ராஜா?: தீபாவிடம் பரிதாபமாக கேட்கும் மாதவன்!