Publish Date: Fri, 04 Jun 2021 (16:00 IST)
Updated Date: Fri, 04 Jun 2021 (16:03 IST)
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
தென்மேற்கு பருவமழை கேரளா மாநிலத்தில் ஆரம்பமாகியுள்ள நிலையில், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் புதுக்கோட்டை, சிவகங்கையில், இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை,விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
Sinoj
Publish Date: Fri, 04 Jun 2021 (16:00 IST)
Updated Date: Fri, 04 Jun 2021 (16:03 IST)