ஒமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த சென்னையில் வார்ரூம்!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (12:04 IST)
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த சென்னையில் வார்ரூம் அமைக்கப்பட்டுள்ளது. 

 
உலகம் முழுவதும் திரிபடைந்த கொரோனா வைரஸான் ஒமிக்ரானின் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவக் கூடியது என்பதால் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கியுள்ளன. அதேசமயம் ஆய்வாளர்கள் பலர் ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது என்றாலும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறி வருகின்றனர்.
 
இந்தியாவில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பதிவானது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 358 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இதில் குணமானவர்கள் எண்ணிக்கை 114 ஆக உள்ளது. தமிழகத்தில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் தொற்று அதிகமாக உள்ளது. 
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த சென்னையில் வார்ரூம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.வளாகத்தில் கோவிட் வார் ரூம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக வார் ரூம் தொடங்க மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments