கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 354 இடங்களில் வெற்று பெற்று, பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக (20 )தலைமையில் பாஜக(5 ) , பாமக(7 ),புதிய தமிழகம்(1), தேமுதிக(4), தமிழ் மாநில காங்கிரஸ்(1), போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் மெகா கூட்டணியாக போட்டியிட்டன.
ஆனால் அதிமுக மட்டுமே ஒரு தொகுதியில் தேனி வெற்றி பெற்றது.அதன் கூட்டணியில் இருந்த பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற எம்பியாக தர்மபுரி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக இணையும் போது, மக்களவைக்கு 7 தொகுதிகளுடன், ஒரு ராஜ்யசபா பதவியும் வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் படி, நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கு பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.