இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் பொருளாதாரா நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சச்ரவையில் உள்ள அமைச்சர்கள் தொடர்ச்சியாக பல பல திட்டங்களை அறிவித்தனர். அதில் நாட்டு மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் இருந்தது.
அதில், முக்கியமாக 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. .
அதன்படி, இன்று 100 நாள் வேலை திட்டத்தின் ஒருநாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தி மத்திய அரசின் உத்தரவின்படி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பலரு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.