Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடையை மீறி வேல் யாத்திரை தொடரும்: வி.பி.துரைசாமி

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (07:53 IST)
தமிழகத்தில் திட்டமிட்டபடி பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் தலைமையில் வேல் யாத்திரை தொடரும் என பாஜக தமிழக துணைத் தலைவர் வி.பி. துரைசாமி தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இன்று அதாவது நவம்பர் 6 முதல் திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை தொடங்கும் என்றும் அந்த யாத்திரை டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் என ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். 
 
ஆனால் இந்த யாத்திரைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது என்பதும், இந்த வழக்கு விசாரணையின் போது வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என தமிழக அரசு அனுமதி உறுதிபட கூறிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் தடையை மீறி திருத்தணியில் வேல் யாத்திரை தொடக்க விழாவுக்கு பாஜகவினர் ஏற்பாடு செய்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி இதுகுறித்து கூறியபோது, ‘வேல் யாத்திரைக்கான தமிழக அரசின் தடை சட்டவிரோதமானது என்றும், அதிமுகவுடன் கூட்டணி என்பது வேறு, வேல் யாத்திர என்பது வேறு என்றும், திருத்தணியில் இருந்து திட்டமிட்டபடி இன்று வேல்யாத்திரை தொடங்கும் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் திருத்தணியில் போலீசார் பாதூகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments