Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொட்டும் மழையில் குடைபிடித்தபடி வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (09:42 IST)
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இன்று காலை 9 மணி நிலவரப்படி இரு தொகுதிகளிலும் 18% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் இந்த இரு தொகுதிகளிலும் சுமார் 70% வாக்குப்பதிவுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று காலை முதல் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் குடைபிடித்த படியே வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்காளர்கள் வருகை தந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வரிசையில் நிற்கின்றனர்.
 
குறிப்பாக முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் வாக்களிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments