Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னை கேள்வி கேட்க வாக்காளர்களுக்கு உரிமையில்லை: கருணாஸ்

Advertiesment
என்னை கேள்வி கேட்க வாக்காளர்களுக்கு உரிமையில்லை: கருணாஸ்
, வியாழன், 23 பிப்ரவரி 2017 (16:14 IST)
எனக்கு ஓட்டுப்போடாதவர்கள் என்னை கேள்வி கேட்க உரிமையில்லை என நடிகர் கருணாஸ் கூறியுள்ளார். இது அனைவரிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.வான கருணாஸ், சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக சென்னை கமிஷனரிடம் புகார் அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கருணாஸ் கூறியதாவது:-
 
திருவாடனை தொகுதியில் எனக்கு எதிராக 2 லட்சம் பேர் உள்ளனர். அதில் எனக்கு ஓட்டு போட்டவர்கள் 75000 பேர்தான். எனக்கு ஓட்டு போடாதவர்கள் என்னை கேள்வி கேட்க உரிமையில்லை.
 
நான் எதையும் நேரடியாக பேசுபவன். என்னைப்பற்றி பரவும் அவதூறை யாரும் நம்ப வேண்டாம், என கூறினார்.
 
ஏற்கனவே பொதுமக்கள் சசிகலா தரப்பு எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் கருனாஸ் எனக்கு ஓட்டு போடாதவர்கள் என்னை கேள்வி கேட்க உரிமையில்லை என கூறியது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனால் கருணாஸ் பற்றி மேலும் சமூக வலதளங்களில் பல்வேறு செய்திகள் வலம் வர வாய்ப்புள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவிற்கு ஆபத்து? ; சயனைடு மல்லிகா வேறு சிறைக்கு மாற்றம்