Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசியலுக்கு வரும் கமல்ஹாசன் ; கண்டிஷன் போட்ட விவேக்

Advertiesment
அரசியலுக்கு வரும் கமல்ஹாசன் ; கண்டிஷன் போட்ட விவேக்
, சனி, 23 செப்டம்பர் 2017 (15:01 IST)
நடிகர் கமல்ஹாசன் அரசிலுக்கு வருவதை நடிகர் விவேக் வரவேற்றுள்ளார்.


 

 
சமீபகாலமாகவே தமிழக அரசு மற்றும் ஊழலுக்கு எதிராக கமல்ஹாசன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். எனவே, அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும், இளைஞர்களுகு மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருப்பதை சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது.  
 
அதோடு, ஜெ.வின் மறைவிற்கு பின் தமிழக  அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தை கமல்ஹாசன் நிரப்புவார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், நான் விரைவில் அரசியலுக்கு வருவேன் கமல்ஹாசன் தற்போது வெளிப்படையாகவே பேசி வருகிறார்.
 
சமீபத்தில் கூட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். இதையடுத்து, அரசியலுக்கு வரும் அவரின் முயற்சி தீவிரமடைந்துள்ளது.
 
இந்நிலையில், நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் “அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல்! அவர் மனத்திண்மையைப்  பாராட்டுகிறேன். இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் சார்பில் வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
தற்போதுள்ள அதே உறுதியுடன் கமல்ஹாசன் இருக்க வேண்டும் என அவர் கோரிக்கையும் வைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிரடி கேஷ்பேக் ஆஃபர்: பிஎஸ்என்எல் நவராத்திரி!!