Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் விஷால் டெபாசிட் இழப்பார். சாபம் இடும் தமிழக அமைச்சர்

Advertiesment
நடிகர் விஷால் டெபாசிட் இழப்பார். சாபம் இடும் தமிழக அமைச்சர்
, சனி, 2 டிசம்பர் 2017 (19:49 IST)
ரஜினி, போல் அரசியலுக்கு வருவேன் என்று இழுத்து கொண்டே போகாமல், கமல் போல் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்து கொண்டிராமல் அதிரடியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் நடிகர் விஷால் அரசியலில் களமிறங்கியுள்ளார்.

விஷாலின் இந்த அதிரடி முடிவு குறித்து பெரும்பாலான திரையுலகினர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் திமுக, அதிமுக உள்பட அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன

விஷால் போட்டி குறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியபோது, விஷால் ஒன்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா அல்ல, விஷால் இந்த தேர்தலில் டெபாசிட் இழப்பது மட்டுமின்றி தனது திரையுலக வாழ்வையும் இழப்பார் என்று கூறியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சாபம் பலிக்குமா? என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரிந்துவிடும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தற்கொலை செய்ய தூக்க மாத்திரை கேட்ட அனாதையாக விடப்பட்ட மூதாட்டி