Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுடன் விஷால் சந்திப்பு!

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (06:54 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 'இளையராஜா 75' என்ற இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பட்டிருந்த தடையை நேற்று நீதிமன்றம் நீக்கிவிட்டதை அடுத்து இந்த நிகழ்ச்சி நடைபெறுவது உறுதியாகிவிட்டது.
 
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் முக்கிய பிரபலங்களை இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
 
இந்த நிலையில் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அளித்தார்.  இந்த நிகழ்ச்சிக்கு வருவதாக துணைமுதல்வரும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ், மனோஜ்குமார் ஆஅகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments