Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருகம்பாக்கம் தேமுதிக வேட்பாளருக்கு கொரோனா தொற்று!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (12:56 IST)
விருகம்பாக்கம் தேமுதிக வேட்பாளருக்கு கொரோனா தொற்று!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இடையில் ஓரளவு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமோ என்ற அச்சம் தமிழக மக்கள் அனைவர் மனதில் எழுந்து இருந்தாலும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார் 
 
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது சென்னை விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து அவர் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டார்
 
ஏற்கனவே சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் என்பவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பொன்ராஜ் மற்றும் சந்தோஷ் பாபு ஆகியோர்களுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிகிரி படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம்.. 3 வருடம் தேவையில்லை! - UGC அளித்த ஒப்புதல்!

காங்கிரஸ் உறவை துண்டிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி?

மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது: குடும்ப சண்டையா?

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மெமு ஏ.சி. ரயில்: தெற்கு ரயில்வே தகவல்..!

ஃபெங்கல் புயல்: இன்றும் நாளையும் அதி கனமழை: 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments