Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதுநகரில் விழுந்த திடீர் இடி! 4 பேர் உடல் கருகி பலி!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (17:56 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் விருதுநகரில் இடி விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று விருதுநகரில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அப்போது கருப்பசாமி நகர் பகுதியில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த பகுதியில் இடி விழுந்துள்ளது. இதில் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த மூன்று ஆண்கள், ஒரு பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments