Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுவிற்கு அடிமையான விருச்சககாந்த் - மறுவாழ்வு மையத்தில் அனுமதி

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (16:11 IST)
காதல் படத்தில் விருச்சககாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பல்லுபாபு, குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 

 
காதல் படத்தில் சினிமாவில் ஹீரோ வாய்ப்பு தேடும் நபராக நடித்து ரசிகர்களிடையே பிரபலமான பாபு, பெற்றோரை இழந்து, சென்னை சூளை பகுதியில் ஆதரவற்று கோவிலில் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்தார். இதைக் கேள்விப்பட்ட ஸ்டண்ட் நடிகர் தீனா மற்றும் இயக்குனர் மோகன் ஆகியோர் அவரை அங்கிருந்து மீட்டு வந்து, அவருக்கு தங்குவதற்கு இடம், உடை, உணவு மற்றும் செல்போன் ஆகிய வசதிகளை செய்து கொடுத்தனர். மேலும், சினிமாவில் அவர் அடுத்த இடத்திற்கு செல்ல உறுதுணையாக நாங்கள் இருப்போம் என கூறினர்.


 

 
இந்நிலையில், மது பழக்கத்திற்கு ஏற்கனவே அடிமையாக இருந்த அவரால், குடிக்காமல் இருக்க முடியவில்லை என்பதை தெரிந்து கொண்ட அவர்கள், பாபுவை மறுவாழ்வு மையத்தில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஒரு மாத காலம் சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. 


 

 
இந்த தகவலை இயக்குனர் மோகன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments