Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் நிகழ்ச்சி - உண்மையில் நடப்பது இதுதானா?

பிக்பாஸ் நிகழ்ச்சி - உண்மையில் நடப்பது இதுதானா?
, வியாழன், 29 ஜூன் 2017 (12:38 IST)
நடிகர் கமல்ஹாசன் நடுவராக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது. இதில் நடிகர், நடிகைகள்  உட்பட 15 பேர் பங்கு பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் 100 நாட்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை.  


 

 
இந்நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு செய்தி பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவற்றில் வைரவலாக பரவி வருகிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பது இதுதான்:
 
நிறைய பேருக்கு இந்த நிகழ்ச்சிய பத்தி முழுசா தெரிந்திருக்க வாய்ப்பில்ல! ஹிந்தில பல வருஷமா ஓடிட்டு இருக்குர நிகழ்ச்சி இப்போ தமிழ்நாட்டுக்கு வந்திருக்கு ! 100 நாள்னு சொன்னாலும் அதோட சூட்டிங்க மிஞ்சி போனா பத்தே நாள்ல முடிச்சிடுவாங்க, அத அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேர கணக்குல பிரிச்சு 100 நாளைக்கு ஒளிபரப்புவாங்க ! என்னன்ன நடக்கனும் பேசனும்னு எல்லாமே முன்னடியே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு தான் சூட்டிங் தொடங்கும் !

webdunia

 

 
ஒவ்வொருத்தரா மக்கள் ஓட்டு போட்டு வெளியேத்திட்டு இருப்பாங்க, ஆனா உண்மையிலேயே யாரு வெளியேரனும்னு முடிவு பண்ணிதான் அதுக்கு ஏத்த மாதிரி காட்சிகள் அமைக்க பட்டிருக்கும்! நிறைய சண்டைகள் , மோதல்கள், விவாதம், சச்சரவில் தொடங்கி காதல், கள்ளகாதல், பாலியல் தொல்லைகள் உட்பட நடப்பதுபோல் காட்சிகள் அரங்கேறும்! மக்கள் அதை கண்டு கொதித்தெழுந்து தவறு செய்தவனுக்கு எதிராக ஓட்டு அளித்து வெளியேற்றும்படி நடைபெறும்! சிலர் தாங்கலாகவே உள்ளே இருக்க முடியாமல் கோபத்தில் வெளியேருவதுபோல் வைத்து TRP ஏற்றுவார்கள் !
 
இளைஞர்களை கவர வீட்டினுள் கவர்ச்சியான அரைகுறை ஆடைகளையே அணிந்து வருவார்கள் நடிகைகள். ஊரெங்கிலும் இதில் நடைபெறும் சம்பவங்களையே பேசுமாறு வைப்பார்கள்! இறுதியில் அவர்கள் முடிவு செய்தபடியே ஒருவரை மக்களே தேர்ந்தெடுத்ததுபோல் பரிசு வழங்கி அடுத்த சீசனுக்கான வேலைகள் தொடங்கி விடும்! இது எல்லாம் தானாக நடப்பதாக நம்பி இதுவரை அக்கம் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என பார்த்து வந்த மக்கள் , இனி இந்த வீட்டில் என்ன நடக்கிறது என பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் , அடுத்த சீசனுக்காக ஏங்கவும் செய்வார்கள் !
 
அடுத்தவர் வீட்டில் நடப்பதை மிகுந்த அக்கறை கொண்டு எட்டி பார்க்கும் நம் மன ஓட்டமே இந்த நிகழ்ச்சியின் உயிர் நாடி! அதை வைத்தே கலாச்சாரத்தை அழித்து காசு பார்க்கும் ஒரு கும்பல்! அதை கிண்டல் செய்கிரேன் என மீம்ஸ் போட்டு மக்களிடையே இன்னும் அதிகமாக பகிர வைக்கும் சில இளைஞர்கள்! முடிந்தால் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டு மக்களுக்கு புரிய வையுங்கள் ! இந்த முறையாவது மீடியா TRP பசிக்கு பலி ஆகாமல் சாமர்த்தியமாக விழித்து கொண்டு மக்கள் பிரச்சனையில் தலையிடு தமிழா!”
 
என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தியில் கூறப்பட்டிருப்பது உண்மையா இல்லையா என்பதை விஜய் டிவிதான் விளக்க வேண்டும். 
 
ஆனால் செய்வார்களா?..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூனியம் எடுக்க சென்ற வீட்டில் வசிய மருந்து தடவி பெண்ணை பலாத்காரம் செய்த ஜோதிடர்!