Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறுதிக்கட்ட தேர்தலில் வன்முறை.! குளத்தில் வீசப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.!!

Clash

Senthil Velan

, சனி, 1 ஜூன் 2024 (12:23 IST)
இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல்  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் Pain இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தண்ணீரில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மக்களவைத் தேர்தலின் 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தொடங்கியதுமே வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. 

குல்தாய் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வன்முறை வெடித்த நிலையில், அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரம் ஆகியவை தண்ணீரில் வீசப்பட்டன. ஆனால், இந்த இயந்திரங்கள், பழுது ஏற்பட்டால் மாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த கூடுதல் இயந்திரங்கள் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இதேபோல், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கரில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சி தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. அங்கு கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

 
இதேபோல் கொல்கத்தா உத்தர் தொகுதியில் உள்ள காசிபோரில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பாஜக வேட்பாளர் தபாஸ் ராய்க்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை