Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடும் பேருந்தின் முன்பகுதி கழண்டு விழுந்து விபத்து!!

Advertiesment
ஓடும் பேருந்தின் முன்பகுதி கழண்டு விழுந்து விபத்து!!
, புதன், 8 மார்ச் 2017 (14:25 IST)
விழுப்புரம் அரசு பேருந்தின் முன் பகுதி தானாக கழண்டு விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது.


 
 
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று அனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40 பயணிகள் பயணம் செய்தனர். 
 
பேருந்து எல்லீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஏதிரே லாரி ஒன்று வரவே ஓட்டுநர் அந்த பேருந்தை நிறுத்துவதற்காக தீடீரென் பிரேக் பிடித்தார். 
 
இதனால் பேருந்தின் முன்பக்கத்தில் உள்ள பம்பர் மற்றும் தகரம் ஆகியவை தானாக கழண்டு நடுரோட்டில் விழுந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்து பேருந்தில் இருந்து கீழே இறங்கினார்கள். 
 
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதி கொலை வழக்கை எப்படி முடிக்கலாம்....விடமாட்டோம்; வழக்கறிஞர் ராம்ராஜ் ஆவேசம்