Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டால் தங்க மோதிரம், பித்தளை குடம்! – திருவண்ணாமலையில் வித்தியாச முயற்சி!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (11:28 IST)
தமிழகம் முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி போடுவோருக்கு பல பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 40 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது 7 மணியளவில் தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்த வருகை தந்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டு கொள்ளும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசாக 2 கிராம் தங்க மோதிரமும் இரண்டாம் பரிசாக எவர் சில்வர் அண்டாவும், மூன்றாம் பரிசாக செம்பு குடமும், நான்காம் பரிசாக செம்பு குடிநீர் பாட்டில், ஐந்தாம் பரிசாக பித்தளை தாம்பாள தட்டு, அடுத்த 4 பேருக்கு 10 லிட்டர் பால் கேனும் பரிசாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதுபோலவே பல நகராட்சிகளில் சேலை, முட்டை, பெட்ரோல், எவர்சில்வர் தட்டு என கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments