Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! முன்கூட்டியே கூடுகிறது தமிழக சட்டப்பேரவை..!

Senthil Velan
செவ்வாய், 11 ஜூன் 2024 (16:15 IST)
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பால் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்  ஜூன் 20-ம் தேதியே தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு  அறிவித்துள்ளார்.
 
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜுன் 24ஆம் தேதி  கூடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு    விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24 ஆம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே ஜூன் 20-ம் தேதி தொடங்கும் என்று தெரிவித்தார்.
 
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற தாரகை கத்பர்ட் சட்டப்பேரவை உறுப்பினராக நாளை பதவி ஏற்கிறார் என்று அவர் கூறினார். 

ALSO READ: நீட் தேர்வு முறைகேடு..! தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ்..! உச்ச நீதிமன்றம் அதிரடி..
 
சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், ஜூன் 20-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. அன்றைய தினம், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரக்ஷா பந்தன் கொண்டாடிய ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி.. வைரல் புகைப்படம்..!

போதைப்பொருள் உற்பத்தி செய்ய ரகசிய ஆய்வகங்கள்.. மடக்கி பிடித்து கைது செய்த போலீஸ்..!

தவெக மதுரை மாநாடு: விஜய் மட்டுமே பேசுவார்.. காவல்துறைக்கு அளித்த தகவல்..!

3 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

வெனிசுலா அதிபரை கைது செய்ய உதவினால் ரூ.483 கோடி பரிசு: அமெரிக்க அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments