Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக சட்டப்பேரவை நிறைவு..! தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

Advertiesment
assembly
பரபரப்பாக நடைபெற்று வந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
 
மக்களவை தேர்தலுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
 
பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரை  மீதான விவாதம் நடைபெற்றது. இதை அடுத்து பிப்ரவரி 19ஆம் தேதி சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி 20ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 
பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் இன்று காரசாரமாக நடைபெற்றது. இதை அடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எலான் மஸ்க்-க்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை!