Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னைக்கு வருகிறது ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல்: பொதுமக்கள் பார்க்க அனுமதி கிடைக்குமா?

Advertiesment
Vikranth
, திங்கள், 5 செப்டம்பர் 2022 (08:00 IST)
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க இந்தியாவின் தொழில்நுட்பத்தில் செய்யப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் சமீபத்தில் பிரதமர் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்டது
 
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் செய்யப்பட்ட இந்த கப்பல் 262 மீட்டர் நீளம் கொண்டது என்பதும் 62 மீட்டர் அகலத்தில் தீவு போல் காட்சி அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் இந்த கப்பலை விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு போதுமான வசதிகள் இல்லை என்பதால் சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள & டி கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கப்பல் நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதற்கான பணி தொடங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கொச்சியிலிருந்து இன்னும் ஒரு சில நாட்களில் இந்த கப்பல் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு வர இருப்பதை அடுத்து சென்னை மக்கள் இந்த கப்பலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்: இன்று முதல் தொடக்கம்!