Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிவிப்பு

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (19:37 IST)
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டன. விக்கிரவாண்டி தொகுதியில் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன், நாங்குநேரி தொகுதியில் வெ. நாராயணன் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதேபோல் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக புகழேந்தி போட்டியிடுவார் என திமுக தலைமை அறிவித்துள்ளது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் டிடிவி தினகரனின் அமமுக ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளன. இதனால் நாம் தமிழர் கட்சியின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது
 
இந்த நிலையில் சற்றுமுன் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் கு.கந்தசாமியும், நாங்குநேரியில் சா.ராஜநாராயணன் என்பவரும் போட்டியிடவுள்ளனர். 
 
அதேபோல் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் பிரவினா மதியழகன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து தமிழகம், புதுச்சேரியில் நடைபெறும் இடைத்தேர்தலில் மூன்று முனை போட்டி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments