Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக சார்பாக இடைத்தேர்தலில் போட்டியிடபோவது இவர்கள் தான்..

Advertiesment
அதிமுக சார்பாக இடைத்தேர்தலில் போட்டியிடபோவது இவர்கள் தான்..

Arun Prasath

, புதன், 25 செப்டம்பர் 2019 (10:17 IST)
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய பகுதிகளில் வரும் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அடுத்த மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கான திமுக வேட்பாளராக நா.புகழேந்தி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக சார்பாக விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அதன் படி விக்கிரவாண்டியில் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன் என்பவரும், நாங்குநேரியில் வெ.நாராயணன் என்பவரும் அதிமுக சார்பாக போட்டியிடுவார்கள் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

முத்தமிழ்செல்வன் விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றிய செயலாளராக இருப்பவர். அதே போல் வெ.நாராயணன் திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி,ஆர். மன்ற இணைச் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை – ரோஹினி தியேட்டருக்கு அபராதம் !