Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணைகிறாரா விஜயதாரிணி? குமரி தொகுதியில் போட்டி என தகவல்..!

Siva
புதன், 14 பிப்ரவரி 2024 (07:08 IST)
கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் விஜயதாரணி  பாஜகவில் இணைய இருப்பதாகவும் பாஜகவின் சார்பில் அவர் கன்னியாகுமரி தொகுதியில் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.  

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது விஜய தாரணி விளவங்கோடு தொகுதியை  கேட்ட நிலையில் காங்கிரஸில் உள்ள சிலர் அவருக்கு சீட் கொடுக்க கூடாது என்று பிரச்சனை செய்ததாக கூறப்பட்டது.

இதனை அடுத்து பாஜக விளவங்கோடு தொகுதியை தருவதாக ஆஃபர் கொடுத்த நிலையில் வேறு வழியின்றி காங்கிரஸ் அந்த தொகுதியை விஜயதாரணிக்கு கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விஜயதாரிணி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குமரி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கூறி இருப்பதாகவும் தெரிகிறது.

ஒருவேளை காங்கிரஸ் கட்சி அவருக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால் பாஜக அந்த வாய்ப்பை அவருக்கு கொடுக்கும் என்றும் அவர் பாஜகவில் இணைவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து கருத்து கூறிய விஜயதாரிணி இந்த செய்தி எனக்கே புதுமையாக உள்ளது நான் டெல்லிக்கு ஒரு  வழக்கு விசயமாக வந்திருக்கிறேன் என்று கூறினார்.  

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments