Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீடியோவில் வாழ்த்து சொன்ன கேப்டன் – தொண்டர்கள் மகிழ்ச்சி

Advertiesment
வீடியோவில் வாழ்த்து சொன்ன கேப்டன் – தொண்டர்கள் மகிழ்ச்சி
, சனி, 26 ஜனவரி 2019 (15:13 IST)
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் அங்கிருந்தபடியே வீடியோவில் குடியரசு தின வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவுக் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். தைராய்டு மற்றும் சிறுநீரகக் கோளாறு ஆகியப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் கடந்த சிங்கப்பூர் சென்று சிகிச்சைப் பெற்று வந்தார்.

இதனையடுத்து இப்போது அடுத்த கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த டிசம்பர் 18 ஆம் தேதியில் இருந்து அங்கு சிகிச்சைப் பெற்று வரும் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பின.

இந்நிலையில் நாடு முழுவதும் இன்று 70 ஆவது குடியரசு தினவிழாக் கொண்டாடப்படுகையில் வீடியோ மூலம் மக்களுக்கு வாழ்த்துகளைக் கூறியுள்ளார். அதில் ,“அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். லஞ்சமில்லாத ஆட்சி, யாருக்கும் அஞ்சாத நீதி, நேர்மையான தேர்தலை மக்களோடு இணைந்து உருவாக்குவோம். தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம். வணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

இதனால் விஜயகாந்த் நல்ல உடல்நிலையில் இருப்பதை அறிந்த தேமுதிக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டேட்டிங் செல்ல இளம்பெண்களுக்கு விடுமுறை: சீன அரசு அதிரடி