தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் காலமான நிலையில், அவர் ஆசை ஆசையாக காட்டுப்பாக்கம் என்ற பகுதியில் கட்டிய அரண்மனை போன்ற வீடு தற்போது கிரகப்பிரவேசத்திற்கு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
விஜயகாந்த் தனது குடும்பத்துடன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில், போரூர் அருகே காட்டுப்பாக்கம் என்ற பகுதியில் அரண்மனை போன்ற ஒரு வீட்டை கட்டிக் கொண்டிருந்தார். இந்த வீட்டை அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கிய நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பார்த்து பார்த்து கட்டப்பட்டது.
இந்த வீடு பாதி நிறைவடைந்த நிலையில் தான் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அதன் பிறகு வீட்டின் பணிகள் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. 20,000 சதுர அடியில் உள்ள இந்த வீடு, அரசியல்வாதியை பார்க்க வரும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நின்று பேசும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜயகாந்த் மரணத்திற்கு பின்னர், அவரது குடும்பத்தினர் இந்த வீட்டை கட்டும் பணியை தொடங்கிய நிலையில், தற்போது இந்த வீடு கட்டும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், இந்த ஆண்டு கிரகப்பிரவேச விழா நடைபெற இருப்பதாகவும் விஜயகாந்த் குடும்பத்தின் வட்டாரங்கள் கூறுகின்றன.