Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜயகாந்த் படம் கிழிப்பு : திமுகவிடம் கெஞ்சல் : தேமுதிக நிலைக்கு யார் காரணம் ?

விஜயகாந்த் படம் கிழிப்பு : திமுகவிடம் கெஞ்சல் : தேமுதிக நிலைக்கு யார் காரணம் ?
, புதன், 6 மார்ச் 2019 (16:39 IST)
தேமுதிக அதிமுக கூட்டணி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அதிமுக சார்பில் நடைபெற பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் படம் இடம்பெற்றுள்ளது.
பெரிய அளவு வாக்கு வங்கி இல்லாத தேமுதிக, ஆரம்பம் முதலே கொஞ்சம் ஓவராய் தான் போய்க்கொண்டிருந்தார்கள். குறிப்பாக அதிமுக பாமகவிற்கு 7 சீட் கொடுத்த பின்னர், தங்களுக்கு 7 அல்லது அதற்கு மேலான சீட்டுகளை கொடுத்தால் தான் கூட்டணி என அதிமுகவிடம் ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டது தேமுதிக.
 
இதையடுத்து இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த திமுக, தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதற்கும் தேமுதிக பிடிகொடுக்கவில்லை. இதனால் திமுக தேமுதிகவை கழற்றிவிட்டுவிட்டது.
 
இந்நிலையில் நேற்றுமுன் தினம் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதால் தேமுதிகவின் கூட்டணி முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
 
இந்நிலையில் இன்று காலையில் தேமுதிகவுக்கு  4 தொகுதிகள் மட்டுமே தருவதாக கூறப்பட்டது. மேலும் 1 ராஜ்ய சபா சீட்டும் தருமாறு கோரப்பட்டது. இந்நிலையில் தன் கட்சி நிர்வாகிகளுடன் விஜய காந்த் அவசரமாக ஆலோசிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் தங்கியிருக்கும் சென்னையிலுள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு  தற்போது தேமுதிக துணைச் செயலாளர் சுதஸ் வந்துள்ளார்.
 
எனவே இன்னும் சில மணி நேரத்தில் தேமுதிக - அதிமுக வுடனான கூட்டணி ஒப்பந்தம் பற்றிய இறுதி முடிவு வெளியிடப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
webdunia
இந்நிலையில் பாஜக பியூஸ் கோயலுடன் சுதீஸ் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது, தேமுதிக நிர்வாகிகள் சிலர் திமுக துணைச் செயலாளர் துரைமுருகன் இல்லத்திற்குச் சென்று அவரிடம் தேமுதிக உங்களுடன் (திமுக) இணைந்து போட்டியிட உள்ளது என்று கேட்டுள்ளார்கள். 
 
ஆனால் இது பற்றி இப்போதைக்கு முடிவு எடுக்க முடியாது.தலைவர் இல்லை என்று துரைமுருகன் கூறிவிட்டார் என்று தெரிகிறது.
webdunia
இது குறித்து துரைமுருகன் கூறிய போது:
 
ஏற்கனவே பாஜகவின் மோடி கலந்து கொள்ளவுள்ள விழாவில் விஜயகாந்த் படம் இடம் பெற்றிருந்தது பற்றி  இல்லத்திற்கு வந்த தேமுதிக நிர்வாகிகளிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூட்டணி உடன்பாடு எட்டப்படாததால் நாங்கள் விஜயகாந்த் படத்தை மோடி கலந்து கொள்ள் உள்ள நிகழ்ச்சியில் இருந்து கிழித்து வந்து விட்டோம் என்று தெரிவித்தார்கள்.
 
இதைகேட்டு எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. எங்களுக்கு ( தேமுதிக) சீட் வேண்டும் எனவும் கேட்டார்கள்... ஆனால் கூட்டணிக்கு ஏற்கனவே சீட்கள் ஒதுக்கிவிட்டதால் இனி சீட் ஒதுக்க முடியாது.
 
வேண்டுமானால் இதே நிலைப்பாட்டில்  இருந்தால் கூட்டணி பற்றி பரிசீலிப்பதாக துரைமுருகன் கூறியிருக்கிறார்.
 
அதே சமயம் தேமுதிகவின் சுதீஸ் பாஜக பியூஸிடன் பேசிவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் துரைமுருகனுடனான சந்திப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
 
அதற்கு ஆம்! துரைமுருகனிடம் பேசியது உண்மைதான் என்றார்.
webdunia
எனவே ஆரம்பத்தில் கெத்து காட்டி விட்டு தற்போது பாஜகவிடம் சீட்டும், திமுகவிடம் கெஞ்சல் ஆகவும், இருந்து வரும் தேமுதிகவின் முதிர்ச்சியில்லாத அரசியல் நய்யாண்டி நிலையை பார்க்கும் போது இதற்குக் காரணம் தேமுதிகவின் இந்த கூட்டணிக் குழப்பத்திற்குக் காரணம் பிரேமலதா விஜயகாந்த், சுதீஸ்,மற்றும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோரே என்று தெளிவாகத் தெரிவதாக அரசியல் விமர்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
 
இனி தேமுதிக கூட்டணி என்பது ஏறக்குறைய டவுட் என்றே தகவல் கசிகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓவராய் பண்ணும் தேமுதிக!! டென்சனான மோடி!!!