Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புத்தாண்டில் தொண்டர்களை நேரில் சந்திக்கும் விஜயகாந்த்

Advertiesment
Vijayakanth
, புதன், 28 டிசம்பர் 2022 (17:52 IST)
தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி  நடிகராக வலம் வந்த விஜயகாந்த் தேமுதிக கட்சியைத்தொடங்கிய சில ஆண்டுகளிலேயே எதிர்க்கட்சித் தலைவரானார்.

அதன்பின்னர், அவரது கட்சி அடுத்தடுத்த தேர்தலில் வெற்றி பெறவில்லை.

சமீபத்தில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விஜய்காந்த் பொதுஇடங்களில், சினிமா விழாக்களில் கலந்துகொள்வதில்லை.

கட்சி விழாக்களில் மற்றும், தேர்தல் காலத்தில் மட்டும் தொண்டர்களை சந்தித்து வந்தார்.
இந்த நிலையில், வரும் புத்தாண்டு தினத்தன்று கட்சித் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,

‘’ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் கழகத்தினரையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம். அதன்படி வரும் புத்தாண்டு தினத்தில் (01.01.2023) சென்னை தேமுதிக தலைமை கழகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கழகத்தினரையும், பொதுமக்களையும் சந்தித்து வாழ்த்துக்களை பகிர்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவமனையில் மோடி தாயார்: உடல்நிலை நிலவரம் என்ன??