Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயகாந்தின் மட்டன் பிரியாணி விருந்து

விஜயகாந்தின் மட்டன் பிரியாணி விருந்து

Advertiesment
விஜயகாந்தின் மட்டன் பிரியாணி விருந்து
, திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (11:44 IST)
சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து, தே.மு.தி.க கட்சியினர் மாற்று கட்சிகளுக்கு செல்வதால், கட்சியில் ஆட்கள் குறைந்து வருகிறார்கள். மாவட்ட செயலர்கள் பலர், கட்சி மாறி விட்டனர்.


 
இதை அடுத்து, தன் தீவிர விசுவாசிகளை மாவட்ட செயலர்களாகவும், பொறுப்பாளர்களாகவும் விஜயகாந்த் நியமித்தார். ஆனால், அவர்களிடம் கட்சியை வழி நடத்தும் அளவுக்கு பணம் இல்லை. அதனால், கட்சியினர் பலரும் கட்சி செயல்பாடுகளில் ஆர்வமில்லாமல் உள்ளனர். இந்நிலையில், மிச்சம் இருக்கும் நிர்வாகிகளையாவது இருக்கி பிடிக்க நினைத்த விஜயகாந்த், வரும் 25ம் தேதி அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு, அன்றைய தினம் மட்டன் பிரியாணி விருந்தளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

அப்போது, அவர்களிடம் உள்ளாட்சி தேர்தல் நிலைப்பாடு குறித்து கருத்து கேட்கவும், அவர் முடிவு செய்துள்ளார். விஜயகாந்தின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், பொதுமக்களுக்கு பல லட்சம் ரூபாய் செலவில் நலத் திட்ட உதவிகள் வழங்குவது அவரின் வழக்கம். இதற்கான செலவுகளை, தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், இந்த ஆண்டு விஜயகாந்தின் பிறந்த நாள் கொண்டாட்ட செலவை  அவரே ஏற்க முடிவு செய்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெரினாவில் கழுத்தை அறுத்து செல்போன் பறிப்பு - கொடூர கும்பல் வெறிச்செயல்